
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணி சார்பாக ஆவேஷ் கான், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.