Advertisement
Advertisement
Advertisement

விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!

தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 30, 2022 • 18:21 PM
'It Was Within The Rules': Says Harmanpreet Kaur On Charlie Dean's Run-Out
'It Was Within The Rules': Says Harmanpreet Kaur On Charlie Dean's Run-Out (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்துக்கு மகளிர் எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. ஆனால் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. 

அதற்கு அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Trending


அடுத்ததாக ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ரன் அவுட் விவகாரம் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “இந்த விஷயத்தை சில ஆட்டங்களாகவே கவனித்து வந்தோம். கிரீஸை விட்டு நன்கு வெளியே நின்று கொண்டு சாதகமான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்து வந்தார் தீப்தி சர்மா. அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். 

ஆனால் அவரை அது போல ஆட்டமிழக்கச் செய்வது எங்களுடைய திட்டம் அல்ல. மைதானத்தில் விளையாடும்போது எப்படியாவது வெற்றி பெறவே எண்ணுவோம். விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம். இதுபற்றி நிறைய பேசியாகிவிட்டது. அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விடலாம்” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement