
உலகெங்கிலும் பல்வேறு வகையான டி20 லீக் தொடர் போட்டிகள் நடத்தப்படுகின்றன . இவற்றில் முக்கியமானதாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடராகும் . இந்த ஐபிஎல் தொடரான கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் .
இந்த ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் . 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வருகின்ற 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது . இந்த ஏலத்தில் 405 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள எல்லா வீரர்களின் கனவாக இருப்பது ஒரு முறையேனும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி விட வேண்டும் என்பதுதான். இத்தகைய பிரபலமான ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தங்களுடைய நாட்டுக்காகவும் ஐபிஎல் இன் சில சீசனங்களில் விளையாடாமல் இருப்பார்கள் . அந்த வகையில் தற்போது உலகக் கோப்பை டி20 போட்டியை வென்ற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிரிஸ் வோக்ஸ் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார் .