Advertisement

கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு  தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!

போட்டி முடிந்து விட்டால்  ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு  சமரசம் கைகுலுக்கி  விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 02, 2023 • 22:14 PM
'It wasn't the nicest thing to see': Kumble on Kohli, Gambhir ugly brawl
'It wasn't the nicest thing to see': Kumble on Kohli, Gambhir ugly brawl (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும்   பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் வைத்து நடைபெற்றது . டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான லக்னோ ஆடுகளத்தில்  பெங்களூர் அணி 126 ரன்களை எடுத்தாலும்  லக்னோ அணியை  108 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து  18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஆர்சிபி அணிக்கு இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .

இரண்டு அணிகளுமே குறைவான ஓட்டங்களில் ஆட்டம் இழந்து  இந்தப் போட்டி பரபரப்பான ஒன்றாக அமையாவிட்டாலும்  ஆட்டத்தின் இறுதியில் நடைபெற்ற சில  விரும்பத்தகாத சம்பவங்கள்  பேசு பொருளாகி இருக்கின்றன . இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  விராட் கோலி மற்றும்  இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையேயான மோதல்  தலைப்புச் செய்தியாக அமைந்திருக்கிறது . இவர்கள் இருவரும் ஓதுவது இது முதல் முறை இல்லை என்றாலும்  இந்த மோதல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

Trending


இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்  முன்னாள் தலைமை பயிற்சியாளர் மாண  அணில் கும்ப்ளே  தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . இது பற்றி பேசிய அவர், “ஒரு பரபரப்பான கிரிக்கெட் விளையாட்டின் போது  அனைவரது உணர்வும் மேலோங்கி இருக்கும். அதற்காக எல்லா உணர்வுகளையும் மைதானத்தில் காட்டுவது ஒரு சரியான  நடைமுறை இல்லை  நீங்கள்  விளையாட்டு வீரராக இருக்கும் போது எதிர் அணியினரையும்  விளையாட்டையும் மதிக்க வேண்டும் . 

போட்டி முடிந்து விட்டால்  ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு  சமரசம் கைகுலுக்கி  விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை . அவர்களுக்கிடையே  என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை . ஒருவேளை இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருக்கலாம். அதனை தீர்ப்பதற்கான இடம் மைதானம் அல்ல . விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற நிகழ்வு  தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement