
கிரிக்கெட் உலகில் பலராலும் பரவலாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிற டி20 லீக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இன்னும் மூன்று நாட்களில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடந்து மே மாதம் 28ஆம் தேதி முடிய இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி அதை அப்படியே ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு செய்திருக்கிறார். இன்று ஐபிஎல் தொடரில் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கக் கூடிய வீரராகச் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் அவர் விளங்குகிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றி இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை சென்றது, அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடியது என்று நான்கு முறை கோப்பையை வென்று சீரான செயல்பாட்டை வைத்திருப்பது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.