
'It's going to be an exciting one' - Shubman Gill on playing CSK in Qualifier 1! (Image Source: Google)
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் 2ஆம் இடத்தில் உள்ளன. லக்னோ 3ஆம் இடத்திலும், மும்பை 4ஆம் இடத்திலும் உள்ளன.
லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குவாலிபையர் சுற்றின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. குஜராத் - சென்னை அணிகள் குவாலிஃபையர் 1-ல் மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இப்போட்டியில் 52 பந்துகளில் 104 ரன்கள் விளாசி குஜராத் வெற்றிக்கு சுப்மன் கில் வழிவகுத்தார்.