
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அதிர்ச்சிகரமாக பந்துவீச்சை தேர்வுசெய்தது. குஜராத் அணிக்கு ஓபனிங் இறங்கி மீண்டும் ஒருமுறை தன்னுடைய ஃபார்மை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 49 பந்துகளில் சதம் விளாசினார்.
இவர் கிட்டத்தட்ட 16 ஓவர்கள் வரை உள்ளே நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தி ஆட்டமிழந்தார். 60 பந்துகளில் 10 சிக்சர்கள் ஏழு பவுண்டரிகள் உட்பட 129 ரன்கள் அடித்தார். கடைசியில் வந்து இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் அடித்து நல்ல கேமியோ விளையாடிய ஹர்திக் பாண்டியா. 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
எட்ட முடியாத இலக்காக இருந்தாலும் இந்த சீசனில் பலமுறை 200+ ரன்களை சேஸ் செய்துள்ளதால் நம்பிக்கையுடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 61 ரன்கள், திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள், கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்துக்கொடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.