
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
புள்ளிப்பட்டிளின் ஆடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துவாரா என்ற எதிர்பர்ப்புகள் அதிகரித்துள்ளது. இத்தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர், 504 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய சாய் சுதர்ஷன், “இந்த மூன்று வருடங்களாக நான் எப்போதும் ஷுப்மான் கில்லுடன் அதிகம் உரையாடி வருகிறேன். வலைகளில் எனக்கு சிரமம் இருந்தால் அல்லது யாரையாவது எதிர்கொள்வதில் சிரமம் இருந்தால், என்னால் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்பது அவருடன் உரையாடுவேன். அவர் விளையாடுவதைப் பார்த்து நான் நிறைய வளர்ந்துள்ளேன்.