Advertisement
Advertisement
Advertisement

இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது - பென் ஸ்டோக்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தின் பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 22, 2024 • 13:12 PM
இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது
இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது (Image Source: Google)
Advertisement

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது.  இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.

இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்தூ கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. 

Trending


ராஞ்சி மைதானம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “இப்போட்டி நடைபெறும் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்சை போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி எவ்வாறான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் தலா நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் என களமிறங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. இந்நிலையில் ராஞ்சி பிட்சை பார்த்து ஸ்டோக்ஸ் இவ்வாறான கருத்தை கூறியுள்ளதாக இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் மீண்டும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன், ரெஹான், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் அகிய சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement