
Jadeja, Brook, Motie Shortlist For ICC Men's Player Of The Month For February! (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. 3 டெஸ்டுகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.