
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கும் ஜடேஜா தற்போது ஆல்ரவுண்டர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று பேட்டிங் பந்து வீச்சிலும் ஜடேஜா முன்னேறி வருகிறார். ஜடேஜா ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இரண்டு முறை முச்சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
எனினும் முன்பு அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஜடேஜா விளங்கி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா குறித்து ரவி சாஸ்திரி பேசியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “ஜடேஜா எப்போதுமே விளையாட வேண்டும் என்ற பசியுடன் இருப்பார். அவருடைய உடல் தகுதி முதன்மையானதாக இருக்கும். கிரிக்கெட் மீது தீராத வெறி அவரிடம் உள்ளது. ஜடேஜாவிடம் நாங்கள் பெரிய அளவில் பேச தேவை இருக்காது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் போது லார்ட்ஸ் மைதானத்தில் ஜடேஜாவிடும் நான் சில அறிவுரைகளை வழங்கினேன்.