
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டி20 போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் கண்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் இணை களமிறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 15 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோஇயும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து 30 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.