
16ஆவது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பஞ்சாப்பின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரான் 49 ரன்களும், ஷாருக் கான் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த தேவ்தத் படிக்கல் 51 ரன்களும், சிம்ரன் ஹெட்மயர் 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது.