சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ஆண்டர்சன் - பிராட் ஜோடி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றனர்
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது .
அந்த அணியின் ஹாரி ப்ரூக்ஸ் சிறப்பாக ஆடி 89 ரன்களையும் பென் டக்கெட் 84 ரன்களையும் எடுத்தனர் . இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது . இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .
Trending
அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளண்டல் அபாரமாக ஆடி 138 ரன்களை எடுத்தார். இதில் 19 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம் . இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ராபின்சன் நான்கு விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . ஜாக் லீச, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் .
இந்தப் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றனர் . இதன் மூலம் இவர்கள் ஆஸ்திரேலியா அணியின் ஷேன் வார்ன் மற்றும் மெகராத் ஜோடி சாதனையை சமன் செய்துள்ளனர் .
இதில் 104 போட்டிகளில் இணைந்து விளையாடிய ஷேன் வார்ன் மற்றும் மெக்ராத் ஜோடி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் களை வீழ்த்திய பந்து வீச்சு ஜோடி என்ற சாதனையை புரிந்து இருந்தது . இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாக்னரின் விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை சமன் செய்திருக்கிறது.
ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஜோடி . இவர்கள் 133 போட்டிகளில் இணைந்து விளையாடி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்தா வாஸ் ஆகியோர் 895 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. போப் 14 ரன்கள்டனும் ஸ்டூவர்ட் பிராட் 6 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . இங்கிலாந்து அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது .
Win Big, Make Your Cricket Tales Now