
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பாக க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்த போட்டியின்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 42வது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது அவரின் முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது கேமராவில் பதிவானது. மேலும் அவர் ரத்த காயத்துடன் பந்து வீச்சை தொடர்ந்தார். அதனை அனைத்து கேமராக்களும் தெளிவாக படம் பிடித்தன. அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.