
James Anderson Included As England Announce 12-Member Squad For 2nd Ashes Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் இடம்பெறுவார் என கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.