Advertisement

இதுவே முடிவாக இருந்துவிடக் கூடாது - ஜேம்ஸ் ஆண்டர்சன்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் தொடரில் மோசமாகத் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
James Anderson 'Praying' For Career After 'Shock' England Ax
James Anderson 'Praying' For Career After 'Shock' England Ax (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 24, 2022 • 05:41 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுகும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 8ஆம் தேதி தொடங்குகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 24, 2022 • 05:41 PM

இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவியிருந்த இங்கிலாந்து அணியிலிருந்து அனுபவ வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Trending

மேலும் ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட்டின் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து புதிய நிர்வாகிகளின் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆண்டர்சன், “இதுவே முடிவாக இருந்துவிடக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன். ஒருவேளை இங்கிலாந்துக்காக இனிமேல் என்னால் விளையாட முடியாமல் போனால் எனக்கு ஆதரவாகப் பலர் உள்ளார்கள் என்பதை நான் அறிவேன். இன்னும் பங்களிக்க நிறைய உள்ளது. விளையாடிச் சாதிப்பதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது. 

நான் தேர்வாகவில்லை என்பதைத் தெரிவித்தபோது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. எனினும் சிறப்பாகப் பந்துவீசுவதைப் போன்ற என்னால் எதைக் கட்டப்படுத்த முடியுமோ அதில்தான் கவனம் செலுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement