
James Anderson registers 1000 scalps in first-class cricket (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுன்டி கிரிக்கெட்டில் லான்கஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதில் கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸாக் கிரௌலி, ஜோர்டன் காக்ஸ், ஆலிவர் ராபின்சன், ஜேக் லீனிங், ஹெய்னோ குன், மேட் மில்ன்ஸ் மற்றும் ஹாரி ஹாட்மோர் ஆகியோரது விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார்.
இதனால் கென்ட் அணி 34 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. இப்போட்டியில் ஹெய்னே குன் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஆயிரமானது விக்கெட்டை வீழ்த்தி, சாதனை படைத்தார்.