
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பிரெண்டன் டக்கெட்டின் இறுதிநேர அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பின் ஆலன் 50 ரன்களையும், கூப்பர் கன்னொலி 48 ரன்களையும், கேப்டன் ஆஷ்டன் டர்னர் 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 14.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸின் ஜேமி ஓவர்டன் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் ஃபின் ஆலன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றதன் காரணமாக களத்தில் சற்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை ஜேமி ஓவர்டன் வீசிய நிலையில் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசுவதற்கு முன்பு நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ஃபின் ஆலன் கிரீஸை விட்டு வெளியேற முயற்சித்தார்.