பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்தவகையில் கேப்டன், அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர்.
Trending
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. ஆனால், இதில் கேரி கிர்ஸ்டன் பங்கு பெரிதாக இல்லை. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர் என்பதையும் அவர் உறுதிசெய்திருந்தார்.
அதன்பின்னர் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணித் தேர்விலும் கேரி கிர்ஸ்டன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேற்கொண்டு அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவுமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளதிலும் கேரி கிறிஸ்டனுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான பயிற்சியாளராகவும் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணியானது கைப்பற்றியதன் காரணமாக, எதிர்வரும் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி அந்த அணிகாக 71 டெஸ்ட் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now