பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி, இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குயிட்டா கிளாடியெட்டர்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடினர்.
கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 69 ரன்களையும், ஜான்சன் சார்லஸ் 53 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையடைய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஒமைர் யூசுஃப் 37 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற அனைத்து வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
heat moments between iftikhar chachu and jason roy pic.twitter.com/S4crrtBz1t
— Babarfied (@THORthayaar) March 12, 2024