முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த பும்ரா!
அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் பும்ரா இல்லாமல் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தடுமாறியது. ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் , ஐபிஎல் என அனைத்து முக்கிய தொடர்களிலும் பும்ரா இல்லை. தற்போது உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால், பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை ஆகிய தொடர்களை குறிவைத்த பும்ரா, அதற்கு தயாராக வேண்டும் என்று உடல்தகுதியை மேம்படுத்தினார். இந்த நிலையில் தான் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டனாக திரும்பினார். பும்ரா எப்படி செயல்பட போகிறார் என்று பலரும் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
Trending
What a start from the #TeamIndia captain
— JioCinema (@JioCinema) August 18, 2023
Bumrah back to what he does best #IREvIND #JioCinema #Sports18 pic.twitter.com/IryoviTKGo
இந்த நிலையில் தான் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பும்ரா, ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். இதில் பும்ரா வீசிய முதல் பந்தை அயர்லாந்து வீரர் பால்பிரின் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே பும்ரா விக்கெட்டை வீழ்த்தினார். 11 மாதமாக இதில் பால்பிர்னி 4 ரன்களில் வெளியேற, அதே ஓவரில் லோர்கன் டக்கரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் கம்பேக் போட்டியில் பும்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now