டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் இவர் தான்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் யார் என்று கவுதம் காம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பை கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. வரும் 23ஆம் தேதி சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. இந்திய அணியில் இளம் மாயாஜால பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Trending
பேட்டிங்கில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஷமி ஆகியோரும், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோரும், சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரும் உள்ளனர்.
அனுபவம் மற்றும் இளமை ஆகிய இரண்டும் கலந்த வலுவான அணியாக திகழும் இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கவுதம் காம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் பேசினர்.
அப்போது பேசிய கௌதம் கம்பீர், “ரோஹித், ராகுல், விராட் கோலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கியமான வீரர்கள். ஆனால் பும்ரா தான் எக்ஸ் ஃபேக்டர்” என்று கூறினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதன்பின் பேசிய இர்ஃபான் பதான், “வருண் சக்கரவர்த்தி கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார். மாயாஜால ஸ்பின்னரான அவர் நல்ல ஃபார்மிலும் உல்ளார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் எக்ஸ் ஃபேக்டர் என்றால் அது பும்ரா தான். பும்ராவைவிட பெரிய எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் அணியில் வேறு யாரும் இல்லை” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now