
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஆசியக்கோப்பை தொடருக்கு இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி அறிவிப்பில் துணை கேப்டன் பற்றிய அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய வீரர் ஒருவர் கொண்டுவரப்படலாம் என்கின்ற தகவல்கள் பிசிசிஐ தரப்பில் இருந்து வெளி வந்திருக்கின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்தது. தொடரை இழந்ததற்கு முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பார்க்கப்பட்டது. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் மோசமாகவே இருந்தது.
இரண்டாவது போட்டியில் வெல்வதற்கு வாய்ப்பு இருந்தும் அவர் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தோற்றார். மேலும் தொடர் முழுவதுமே அவருக்கு இந்தப் பிரச்சனைகள் இருந்தது. தற்பொழுது ஆசியக்கோப்பைக்கு ஓய்வு தரும் பொருட்டு, அயர்லாந்து சென்றுள்ள இந்தியா டி20 அணிக்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, காயத்திலிருந்து திரும்ப வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.