
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது நேற்று கண்டி நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடியது.
அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் அடித்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ் மழை காரணமாக நடைபெறாமல் போனதால் இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக போட்டியின் நடுவர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தனது இரண்டாவது போட்டியில் நாளை செப்டம்பர் நான்காம் தேதி நேபாள் அடிக்கு எதிராக அதே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா நாளைய நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.