Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலியா - பும்ரா குறித்து வெளியான முக்கிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Advertisement
Jasprit Bumrah set to play the 2nd T20I against Australia in Nagpur
Jasprit Bumrah set to play the 2nd T20I against Australia in Nagpur (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2022 • 11:23 AM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் நாக்பூர் வந்தடைந்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2022 • 11:23 AM

முதல் டி20 போட்டியை இந்தியா இழந்ததால் வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை , இதில் வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.

Trending

இந்திய அணியில் பேட்டிங் பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. ரோஹித் 11, விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தும், இந்தியா 208 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. ஆனால் பந்துவீச்சு தான் படு மோசமாக உள்ளது. அணியில் இடம்பெற்ற உமேஷ் யாதவ், ஹர்சல் பட்டேல், புவனேஸ்வர் குமார் என 3 வீரர்களுமே ரன்களை வாரி வழங்கினர்.

விக்கெட்டை எடுக்க வேண்டிய சாஹலும், முதல் ஆட்டத்தில் கொடை வள்ளலாக மாறினார். இதனால், இந்தியா டாஸ் வென்றால் சேஸிங் செய்வதே வெற்றி பெற ஒரே வழி. இருப்பினும் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளார். புவனேஸ்வர் குமாரை வெளியே அனுப்பிவிட்டு தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சோக்க வாய்ப்புள்ளது.

இதே போன்று சாஹலுக்கு பதில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஹர்சல் பட்டேலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நாளைய போட்டியில் கிட்டத்தட்ட களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் உமேஷ் யாதவின் இடத்தில் பும்ரா களமிரங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்: ரோஹித் சர்மா,கேஎல் ராகுல்,விராட் கோலி,சூர்யகுமார் யாதவ், ஹ்ர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல்,அஸ்வின், தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement