
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் களமிறங்குகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.
ஆனால் நாட்டுக்காக ஓய்வெடுத்து முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்தனர். இருப்பினும் யாராவது நாட்டுக்காக உலகக்கோப்பை போன்ற தொடரில் வேண்டுமென்றே காயமடைந்து வெளியேறுவார்களா? என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவையும் கொடுத்தனர்.