உலகக்கோப்பை 2023: ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய ஜெய் ஷா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.
மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ நிர்வாகம் வழங்கி வருகின்றது. கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலவசமாக விஐபி இருக்கையில் அமர்ந்து காணலாம்.
Trending
முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். தொடர்ந்து, மேலும் பல பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் டிக்கெட்டை பெறுவதற்கு சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் பல துன்பங்களை சந்திக்கும் நிலையில் விவிஐபிக்களுக்கு பிசிசிஐ இலவசமாக கோல்டன் டிக்கெட் வழங்குவது சரிதானா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விவிஐபிக்களுக்கு டிக்கெட் வாங்க பணம் இருக்காதா என்றும் அவர்கள் சாடி வருகிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now