
Jemimah Rodrigues' fiery knock helps India post a total of 150/6 against Sri Lanka (Image Source: Google)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர், இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோட்ரிக்ஸ் அரைசதமும் கடந்தார்.