
Jhulan Returns In Indian Women's White-Ball Squad For England Tour, Navgire Gets Maiden Call-Up (Image Source: Google)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இங்கிலாந்தில் இந்தியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்ஹாமில் செப்டம்பர் 10 ஆம் தேதியும், இரண்டாவது டி20 செப்டம்பர் 13 ஆம் தேதியும், செப்டம்பர் 15ஆம் தேதி பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் 3வது போட்டியும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து செப்டம்பர் 18இல் தொடங்கும் ஒருநாள் போட்டி செப்டம்பர் 24இல் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.