ஆர்சிபி அணியின் கேப்டனாகும் ஜித்தேஷ் சர்மா?
ரஜத் படிதார் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் இன்றைய தினம் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரானது திட்டமிட்டபடி அடுத்த வாரம் தொடங்கும் எனில், ரஜத் படித்தார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் விளையாடாத பட்சத்தில் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜித்தேஷ் சர்மா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றவகையில் ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் ஜித்தேஷ் சர்மாவும் தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளேன் என்பதை உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா, “ஆர்சிபி நிர்வாகம் எனக்கு அளித்த வாய்ப்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஆர்.சி.பி அணியின் கேப்டனாகப் போகிறேன், இது எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு பெரிய விஷயம். ஒரு வீரராகவும், கேப்டனாகவும், அணிக்கு எது சரியான கூட்டணியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால், தேவ்தத் படிக்கல் அல்லது ரஜத் படிதார் இருவரும் தேர்வுக்கு கிடைக்கவில்லை.
Also Read: LIVE Cricket Score
அவர்களை மாற்றுவது மிகப்பெரிய பொறுப்பு. லக்னோவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றிருந்தால், எங்கள் நிலை சிறப்பாக இருந்திருக்கும் என்பதால், நான் புள்ளி பட்டியலை பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அதெல்லாம் என் மனதில் இருந்தது. நான் எங்கள் அணியின் 2-3 பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களிடமும் பேசினேன். நான் கேப்டன் பதவிக்கு எல்லா வகையிலும் தயாராக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now