
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுநாள் வரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “ஒரு கேப்டனின் பங்கு என்னவென்றால், உங்கள் வீரர்களிடமிருந்து சிறந்த செயல்திறனைப் பெறுவதுதான் என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் ஒரு தொடக்கத்தைப் பெற்றபோது, ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உத்வேகம் பெற்றோம். அதன் பிறகு, ஒவ்வொரு நபரும் முன்னேறிச் சென்றனர்.