பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இரு அணி வீரர்க்ளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் விளையாடும் ஜோ ரூட் புதிய மைல் கல் ஒன்றை எட்டுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, இந்தப் போட்டியில் ஜோ ரூட் 150 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த 7ஆவது வீரர் எனும் சதனையைப் படைப்பார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதேசமயம் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இதுவரை 141 டெஸ்ட் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 49.80 என்ற சராசரியில் 62 அரைசதங்கள், 31 சதங்கள் என 11,804 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் 10ஆம் இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் 150 ரன்களை எடுக்காவிட்டாலும், 14 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் மஹிலா ஜெயவர்த்னேவையும், 64 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சந்தர்பால் ஆகியோரது வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now