
Joe Root "Sacrifices" Opportunity To Enter IPL Mega Auction (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5ஆவது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் பங்குபெறவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்துக்காக என்னுடைய பெயரைத் தரவில்லை. அணிக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தியாகம் செய்யத் தயார். இந்த அணிக்காக நிறைய செய்யவேண்டியுள்ளது. அதற்காக என்னுடைய ஆற்றல் தேவைப்படுகிறது. என் நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நான் மிகவும் அக்கறை கொள்கிறேன். அணி எந்த இடத்தில் இருக்கவேண்டும் என விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.