இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக ஜோ ரூட் நீடிப்பார்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை ஜோ ரூட்டே வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
Trending
மேலும் ஆஷஸ் டெஸ்ட் தோல்வி எதிரொளியாக இங்கிலாந்து பயிற்சியாளர், நிர்வாக இயக்குநர் என பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜோ ரூட்டின் கேப்டன் பதவியும் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை ஜோ ரூட்டே வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை ஜோ ரூட் தான் வழிநடத்துவார். அவருடன் பேசியதன் மூலம், இந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியை முன்னோக்கி நகர்த்துவதில் அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைச் செய்வதற்கான நம்பமுடியாத ஊக்கமும் ஆற்றலும் அவரிடம் உள்ளது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now