
இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.
கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதையடுத்து தற்போது ஓய்வில் உள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆர்ச்சர்,“2021-ஆம் ஆண்டில் என்னால் மீண்டும் விளையாட முடியாது என்பதை அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் எதுவுமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் மிக முக்கியம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஆஷஸ் தொடர்களில் விளையாடாமல் இருப்பது வேதனையளிக்கிறது.