
Jofra Archer To Undergo Surgery For Troublesome Right Elbow (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் இந்திய அணிக்கெதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடாமல் விலகினார். அதன்பின் தற்போது தான் காயத்திலிருந்து குணமடைந்த ஆர்ச்சர், இங்கிலாந்து கவுண்டி அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
இந்நிலையில் அத்தொடரின் போது ஆர்ச்சர் மீண்டும் தனது முட்டி பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து அவர், நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.