
தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 தொடரில் சிஎஸ்கே அணி ஜோகனஸ்பர்க் நகரத்தை மையமாக வைத்து புதிய அணி ஒன்றை வாங்கியுள்ளது. அதற்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணிக்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய விதிப்படி டி20 தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்யலாம். அதில் ஒரு சர்வதேச தென் ஆப்பிரிக்கா வீரரும், ஒரு உள்ளூர் தென் ஆப்பிரிக்க வீரரும் அடங்குவார்கள். மற்ற இரண்டு வீரர்கள் வெவ்வேறு நாட்டுச் சேர்ந்த வீரர்கள் ஆக இருக்க வேண்டும். இந்த விதியின்படி தற்போது சிஎஸ்கே அணி 5 வீரர்களை தேர்வு செய்துள்ளது. முதல்வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஆர்சிபி கேப்டனாக இருக்கும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டூ பிளெசிஸ் கேப்டனாக புதிய அணிக்கு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளதால் அவர் புதிய அணியையும் சிறப்பாக கட்டமைத்து வெற்றியை தேடி தருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், டுபிளசிஸ் இன் அனுபவம் விலை மதிப்பற்றது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.