எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Trending
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
From
— Pretoria Capitals (@PretoriaCapsSA) July 29, 2024
Pretoria, give us a warm cheer as we welcome Jonathan Trott as the Head Coach for the upcoming #SA20 season#RoarSaamMore pic.twitter.com/eCAgP7nuaK
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங், டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்ட ஜானதன் டிராட், அதன் காரணமாக தற்சமயம் பிரிட்டோரிய அணியின் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now