
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிடன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓவல் இன்விசிபில் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லண்டன் ஸ்பிரிட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜென்னிங்ஸ், ஒல்லி போப், ஹெட்மையர், டேனியல் லாரன்ஸ், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதானால் 92 பந்துகளிலேயே லண்டன் ஸ்பிரிட் அணி அனைத்து விக்கெட்டுகாளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓவல் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், டாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஓவல் அணியில் தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.