
Jos Buttler Record: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், கடைசி போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்ததற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.