
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும்ம் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் முதல் போட்டியில், பட்லர் 21 பந்துகள், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 23 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.