
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இயான் மோர்கன் தலைமையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது, இம்முறை ஜாஸ் பட்லரின் தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வரும் இவ்வேளையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் குறித்து ஜாஸ் பட்லர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒருநாள் கிரிக்கெட்டில் சில வீரர்கள் தங்களுக்கே உரித்தான மிகச்சிறப்பான திறன்களுடன் களத்தில் அற்புதமாக பேட்டிங் செய்வார்கள். அந்த வகையில் நான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் ஆகிய மூவரையும் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர்களது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.