ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட பெற்றுள்ளார்.

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்ட்த்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியாந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வேற்றியைத் தேடித்தந்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். மேற்கொண்டு இப்போட்டியின் மூலம் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லையும் எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 50 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்தார்.
Also Read
இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கூட்டாக 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். முன்னதாக மிட்செல் மெக்லெகன் 36 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 5ஆம் இடத்தில் இருந்த நிலையில், ஜோஷ் ஹேசிவுட்டும் 36ஆவது இன்னிங்ஸில் இதனைச் செய்த்து அசத்தியுள்ளார். இது தவிர் ஜோஷ் ஹேசில்வுட் டி20 கிரிக்கெட்டில் தனது 150ஆவது விக்கெட்டையும் பூர்த்தி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- காகிசோ ரபாடா - 27 போட்டிகளில்
- சுனில் நரைன் - 32 போட்டிகளில்
- லசித் மலிங்கா - 33 போட்டிகளில்
- கலீல் அஹ்மத் - 35 போட்டிகளில்
- இம்ரான் தாஹிர் - 35 போட்டிகளில்
- ஜோஷ் ஹேசில்வுட் - 36 போட்டிகளில்
- மிட்செல் மெக்லெகன் - 36 போட்டிகளில்
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில், விராட் கோலி 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும், பில் சால்ட் 26 ரன்களையும், டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களையும், துருவ் ஜூரெல் 43 ரன்களையும், நிதீஷ் ரானா 28 ரன்களையும், ரியான் பராக் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து194 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now