
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதற்காக இந்திய அணியின் ஒரு பகுதியினர் ஏற்கனவே லண்டன் சென்றுவிட்டனர். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் ஃபிட்னஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
ஹேசில்வுட் ஒரு சிறிய உடல்நலப் பிரச்சனையுடன் போராடி வருகிறார், இதன் காரணமாக அவர் இந்த மாத தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான தனது நேரத்தை குறைக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அவர் முழு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முழு உடல் தகுதியுடன் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் தான் அவர் பயிற்சி செய்து வருகிறார். இதன்மூலம், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என நம்பப்படுகிறார். இதுகுறித்து ஹேசில்வுட் கூறுகையில், "எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு செசனும் எனக்கு முக்கியம். ஜூன் 7ஆம் தேதி வரை நான் பயிற்சியில் ஈடுபடுவேன். எங்களுக்கு இன்னும் மூன்று முதல் நான்கு செசன்ஸ் இருக்கும். எனவே, அனைத்து பயிற்சிகளையும் சரியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.