
WI vs AUS, 2nd ODI: கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் பிராண்டன் கிங் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 14 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 16 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 12 ரன்னிலும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.