1-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரது அபாரமான பந்துவீச்சின் மூலம் 145 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ஷுப்மன் கில், “இந்த போட்டியில் இங்கிலாந்து அணி எங்கள் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தியது, ஆனால் எங்களது தொடக்க வீரர்கள் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன், அணிக்கு தேவையாம அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இப்போட்டியில் மிக சிறப்பான தொடக்கம் கிடைத்தாலும், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததது நெருக்கடியை ஏற்படுத்தியது.