
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியிலுள்ள சௌரஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்னர். இதையடுத்து தனது அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 62 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகினார்.
அதன்பின் மற்றொரு அறிமுக வீரரான துருவ் ஜுரெல் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் துருவ் ஜுரெல் தனது முதல் சர்வதேச சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். அதிலும் குறிப்பாக 146 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த அந்த பந்தை துருவ் ஜுரெல் ஸ்டம்பிற்கு பின்னால் சிக்சர் அடித்தது பாராட்டுகளை பெற்று வருவதுடன், அந்த காணொளியும் வைரலாகி வருகிறது.