Advertisement

லங்கரின் ராஜினாமா குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து!

ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார்.

Advertisement
Justin Langer Saga: 'Players Don't Make Decisions, Why Blame Them?'
Justin Langer Saga: 'Players Don't Make Decisions, Why Blame Them?' (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 07, 2022 • 04:05 PM

கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. அந்த பிரச்னையால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேரன் லீமன் விலகிய பின்னர், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார் ஜஸ்டின் லாங்கர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 07, 2022 • 04:05 PM

மிகவும் நெருக்கடியான நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் லாங்கர்,   2 புதிய கேப்டன்களின் கீழ் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் அணிகளை கட்டமைத்து அந்த அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

Trending

ஜஸ்டின் லாங்கர் பயிற்சியின் கீழ் ஆரோன் ஃபின்ச் தலைமையில் வெள்ளைப்பந்து அணிகளும், டிம் பெய்ன் தலைமையில் டெஸ்ட் அணியும் சிறப்பாக செயல்பட்டது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2 முறை டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி. 

ஆனாலும் அந்த தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து, டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது. 

ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் 2 மிகப்பெரிய தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர், நீண்டகாலத்திற்கு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறைந்த காலத்திற்கே நீட்டிக்க தீர்மானித்தது. அதனால் அதிருப்தியடைந்த ஜஸ்டின் லாங்கர், திடீரென பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜஸ்டின் லாங்கர் விவகாரத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதத்தை ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

ஜஸ்டின் லாங்கர் விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு அளிக்காததும் விமர்சனத்துக்குள்ளானது. பாட் கம்மின்ஸை மிட்செல் ஜான்சன் விமர்சித்திருந்தார்.  தைரியமற்ற பாட் கம்மின்ஸ், அவரது பயிற்சியாளரை அவமரியாதை செய்துவிட்டார் என்று ஜான்சன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜஸ்டின் லாங்கரே, சீனியர் வீரர்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் தகவல் வெளியானது. எனவே இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.

இந்த விவகாரம் குறித்து ஸ்டீவ் வாக், பாண்டிங், மேத்யூ ஹைடன், மார்க் டெய்லர், மிட்செல் ஜான்சன் என மிகப்பெரும் ஜாம்பவான்கள் அனைவருமே லாங்கருக்கு ஆதரவாக குரல்கொடுத்த நிலையில், இதுதொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மைக்கேல் கிளார்க், ஜஸ்டின் லாங்கர் விவகாரத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகிய இருதரப்புக்கும் இடையில் மாட்டிக்கொண்டார் பாட் கம்மின்ஸ். பாட் கம்மின்ஸ் தான் ஜஸ்டின் லாங்கரின் விலகலுக்கு காரணம் என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். மிட்செல் ஜான்சனும் அப்படித்தான் நினைக்கிறார். 

ஆனால் கம்மின்ஸால் மட்டும் லாங்கரை நீக்கிவிடமுடியாது. இந்த விவகாரத்தில் கம்மின்ஸ் இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். ஸ்டீவ் வாக்-ஏ இந்த விவகாரத்தில் கருத்து கூறியிருக்கிறார் என்றால் மிகப்பெரிய விஷயம் தான். ரசிகர்களும் கம்மின்ஸையே தாக்குகின்றனர். இதில் அவரது நிலைப்பாடு என்னவென்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement