
Kagiso Rabada Record: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் தென் அப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்துள்ளார். அந்தவகையில் இந்த இன்னிங்ஸில் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 5ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.